பாதாம் முந்திரியை விட விலை மலிவான பருப்பு வகைகள்

                                         தினமும் நொறுக்கு தீனிகளுக்கு பதிலா பருப்பு வகைகளை சாப்பிட்டு வந்தால் நம் ஆரோக்கியத்திற்கு நல்லதுநட்ஸ் என்றதுமே நம் அனைவருக்கும்  நினைவுக்கு வருவது பாதாம்பிஸ்தாமுந்திரி போன்ற நட்ஸ்கள் தான்.  இந்த  நட்ஸ் வகைகள் கொஞ்சம்  விலைக்கா  விற்கிறது?  மாத வருமானத்தில் பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்தும் நடுத்தர மக்கள்  மற்றும் ஏழை எளிய மக்கள்  அதனை வாங்கி சாப்பிட தான்  முடியுமாஆனால் மலிவான விலையில் இவற்றை விட  அதிக  சத்துக்கள் கொண்ட ஐந்து  நட்ஸ்   வகைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

1.வேர்க்கடலை     

   வேர்க்கடலையில்உள்ள சத்துக்களை  சொன்னால் நம்பமாட்டீர்கள்.  பாதாம்முந்திரியை விட இரண்டு மடங்கு சத்துகள் வேர்க்கடலையில் இருக்கிறது.      வேர்க்கடலையில் நல்ல கொழுப்புஉடலுக்கு தேவையான போரான்மெக்னீசியம்விட்டமின் போலிக் ஆசிட்வைட்டமின் பிமற்றும் நைட்ரிக் அமிலம் போன்றசத்துக்கள் அடங்கி இருக்கிறதுவேர்கடலையின் விலை ஒரு கிலோ 100க்கும் குறைவு தான்ஆனால் முந்திரிபாதாம் விலை 800 முதல்  1600 வரை செலவாகும்

நன்மைகள்

  •  தினமும் ஒரு கையளவு வேர்க்கடலை சாப்பிட்டு வர நீரிழிவு நோய்  விரைவில் கட்டுப்படும்.
  • வேர்க் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை  பலப்படும்.
  • இளமையை பராமரித்து சருமத்தை பாதுகாக்கும்.
  • நியாபக சக்தியை அதிகரிக்கும்.
  • பித்தப்பை கற்களை கரைக்கும்.
  • இதய வால்வுகளை பாதுகாக்கும் மற்றும் இதயம் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்கும்.
  • மன அழுத்தம் குணமாகும்.  
  • இதில் உள்ள நல்ல கொழுப்பு உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதனால் உடல் பருமன் உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
  • வேர்க்கடலையில் ஃபோலிக் அமிலம் அதிக அளவில் இருப்பதால் தொடர்ந்து சாப்பிடும்  கர்ப்பிணி பெண்களின் கர்ப்பப்பை பலப்படும். 

2. கொண்டைகடலை

    கொண்டைக்கடலையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வெள் ளை கொண்டைக்கடலை மற்றொன்று  கருப்பு கொண்டைக்கடலை. இதில்  கருப்பு கொண்டைக்கடலையில் தான் சத்துக்கள் அதிகம். கருப்பு கொண்டைக்கடலையில் ஃபோலிக் அமிலம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள்அதிக அளவில்காணப்படுகிறது. இது மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

 கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஃபோலிக் அமிலம், ஆண்டியாக்ஸின்  தன்மை கொண்ட சாபோனிக்  தான் போன்ற பைட்டோ வேதிப்பொருட்கள் அதிக அளவில் உள்ளது. வெள்ளை  கொண்டைக்கடலையை விட இதில் நார்ச்சத்துக்கள் அதிகம். குளுக்கோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக்கூடியது என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை தினமும் சாப்பிட்டு வரலாம். இதில் இரும்பு சத்து  அதிக அளவில் உள்ளதால் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை வராமல் தடுக்கலாம். 

3. சோயா பீன்ஸ் 

    அசைவ உணவில் அதிக அளவில் இருக்கிறது என்பது பலரின் கருத்துஇதனை அசைவ உணவு பிரியர்களின் வரப்பிரசாதம் என்று கூட  சொல்லலாம்லிட்டர் பசும்பாலில் உள்ள புரதம், 1கிலோ மாமி சத்தில் உள்ள புரதம், 24 நாட்டுக்கோழி முட்டைகளுக்கு சமமான புரதம்  கொண்ட ஒரே சைவ தானியம் இந்த சோயா பீன்ஸ் தான். உடல் எடையை  குறைப்பதில்  சோயாவுக்கு முக்கியபங்கு உண்டு. சோயா பீன்ஸில் உள்ள  நல்ல கொழுப்புகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து உடல்  எடையையும் குறைக்கிறது. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது இந்த சோயா  பீன்ஸ். 

    மற்ற தானியங்களில் இல்லாத அளவிற்கு 240  மில்லி கிராம் கால்சியம்,  690 மில்லி கிராம் பாஸ்பரஸ் சத்தும் இந்த சோயாவில் உள்ளது. இந்த இரண்டு  சத்துக்களும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தையின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் தாய்ப்பால்  கொடுக்கும் பெண்களுக்கு அவசியம் தேவையான சத்துக்கள். அதனால் இந்த சோயா பீன்ஸ் சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

4. உலர் திராட்சை

    உலர் திராட்சையில் அத்தியாவசிய சத்துக்களான மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது.  ஆனால் உலர்  திராட்சையை ஊறவைத்து சாப்பிடுவதே சிறந்தது என்று பலருக்கும் தெரியாது. தினமும் 10 லிருந்து 20 உலர் திராட்சையை இரவு படுக்கும் முன் நீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலையில் ஊறிய உலர் திராட்சை நீருடன் சேர்த்து பருகி வரஉடலில் உள்ள பல பிரச்சனைகள்        குணமாகும். 

நன்மைகள்

  • நீரில் ஊற வைத்த உலர்திராட்சையை சாப்பிட்டு வர உடலில் உள்ள புற்றுநோய் காரணிகள் அழிக்கப்படும்.
  • ரத்தசோகை குணமாகும்.
  • சிறுநீரக கற்கள் கரையும்.
  • மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
  • ஆண்மை குறைபாடு போன்ற பிரச்சினைகள் குணமாகும். 

5. பேரீச்சை

   பேரீச்சையில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து இரத்த சோகை அதாவது அனீமியாவை குணமாக்கும். புதிய ரத்த செல்களை உருவாக்கி  ரத்த உற்பத்தியை  அதிகரிக்கும். இதனால் உடலில் உள்ள ரத்த அளவு சீராக இருக்கும். ரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு பேரிச்சை சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். இதில் உள்ள கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு மற்றும் செலினியம் போன்ற நுண்ணிய சத்துகள் எலும்புகளை வலுவாக்குகிறது. மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும்  எலும்பு சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. குறிப்பாக  பெண்கள் மற்றும் வயதானவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும். முதிர் வயதில் ஏற்படக்கூடிய எலும்புத் தேய்மானம் போன்ற பிரச்சனைகள் தடுக்கிறது. இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலை  தடுக்கிறதுநீரிழிவு  நோயாளிகள் பயமில்லாமல் தினமும் 1  முதல் 2 பேரீச்சைகளை சாப்பிட்டு வரலாம்.

 

Comments

Popular posts from this blog

வேகமாக ஹீமோகுளோபின் அதிகரிக்க நாம் அன்றாடம் சாப்பிட வேண்டிய உணவுகள்