வேகமாக ஹீமோகுளோபின் அதிகரிக்க நாம் அன்றாடம் சாப்பிட வேண்டிய உணவுகள்

              இன்றைக்குரிய   காலகட்டத்தில்  நிறைய பேர் இரத்தச்சோகை என்கிற பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். இந்த இரத்தச்சோகை ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணங்கள் என்னவென்று பார்த்தால் சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகள் எடுக்காமல் இருப்பதும், ஒருவேளை உணவுகள் அதிகம் எடுத்தால் கூட சாப்பிட்ட உணவில் உள்ள சத்துகள் முழுமையாக உடலில் போய் சேராமல் இருப்பதும் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணங்கள் ஆகும்.  இது தவிர உடலின் உள்ளுறுப்புகளில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் கூட இரத்த சோகை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.  இரத்தச்சோகை பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தான் அதிகம் இரத்தச்சோகை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக கற்பிணி பெண்கள் மற்றும் மாதவிடாய் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ள பெண்கள் என அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் அதிகமாவதற்கு தேவையான சத்து இரும்பு சத்து தான். பொதுவாக மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 8 மில்லி கிராம் இரும்புச்சத்து போதுமானது. ஆனால் பெண்களுக்கு மாதவிடாய் போன்ற காலங்களில் 16 மில்லி கிராம் இரும்புச்சத்து தேவை. உடலில் ரத்த உற்பத்திக்கு தேவையான சத்து கிடைக்காமல் இருக்கும் போது மிக எளிதில்  ரத்த சோகை பிரச்சினை உருவாகும். இதனால் தான் மருத்துவர்கள் அயன் டானிக் மற்றும் அயன் மாத்திரைகளை பரிந்துரைக்கிறார்கள்.

இந்த அனிமியா பிரச்சனையினால் உடல் சோர்வு, உடல் அசதி, வாந்தி, மயக்கம் போன்ற பல பிரச்சனைகளை அவதிப்பட நேரிடும். இது மட்டுமில்லாமல்  நம்முடைய உடல் உறுப்புகள் இயக்கம் சீராக இல்லாமல் பிற பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அந்த ரத்த சோகை பிரச்சினை உடனடியாக சரியான முறையில் சிகிச்சை எடுத்து வந்தால் குணமாகும்.

ஒரு கைப்பிடி அளவு கருப்பு திராட்சை எடுத்து அதை தண்ணீரில் ஊற விட்டு அந்த தண்ணீரை வடித்து  ஜூஸாக வெறும் வயித்தில் குடிக்க வேண்டும். கருப்பு திராட்சை கண்டிப்பாக தினமும் எடுத்து வரும்போது சீக்கிரமாகவே ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.

10 கிராம் மாதுளை ஜூஸ் தினமும் குடிக்க வேண்டும்.  நாம் நினைக்கிற மாதிரி சிவப்பு மாதுளை ஜூஸ் கிடையாது. அதிலும் நாட்டு மாதுளை ஜூஸ் தான் குடிக்க வேண்டும். நாட்டு மாதுளை வெள்ளை மற்றும் லைட் பிங்க் நிறத்தில் இருக்கும்.

கீரைகள் அதிக அளவில் உணவில் எடுத்துட்டு வர வேண்டும். அனிமியா பிரச்சனையினால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைக்கீரை அதிகளவு சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் முருங்கைக்கீரையில் தான் அதிகளவு உள்ளது. மேலும் பீட்ரூட் உணவில் அதிக அளவில் சேர்க்க வேண்டும்.

 மேலும் அசைவ உணவு விரும்புபவர்கள் ஆட்டு ஈரல் கண்டிப்பா எடுத்துட்டு வர வேண்டும். இதில் அதிகப்படியான இரும்புச்சத்து மற்றும் புரதமும் இருக்கிறது. ஆட்டு இரத்தத்தை பொரியலாக எடுத்து வரலாம். இந்த ஆட்டு ஈரல் மற்றும் ஆட்டு ரத்தம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுத்து வரும்போது சீக்கிரமாகவே ஹீமோகுளோபின்  அதிகமாகும்.

காய்கறி ஜூஸ் நல்ல நாட்டு காய்கறிகளை சேர்த்து மிக்ஸ் பண்ணி ஒரு வேளை நல்ல சூப்பு போட்டு தினமும் எடுத்துட்டு வரவும். நல்ல கலர்ஃபுல்லான  காய்கறிகளை சேர்த்து மிக்ஸ் பண்ணி தினமும் சாப்பிடுவதால் சீக்கிரமாகவே ஹீமோகுளோபின் அதிகரிக்கும். தேனில் ஊற வைத்த அத்திபழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து மற்றும் ஏராளமான விட்டமின் மற்றும் புரதம்  இருக்கிறது. அத்திப்பழத்தை  தேனில் ஊற வைத்து சாப்பிடும் போது நாம் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய சத்துக்களை  முழுமையாக குடல் உறிஞ்சுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆகவே தேனில் ஊற வைத்த அத்திபழம் தினமும் ஒரு பழம் சாப்பிட்டு வந்தால் கூட போதும்.  

    எல்லோரும் கண்டிப்பாக எடுக்ககூடிய ஒரு விஷயம் என்பது திரிபலா சூரணம். இரவு உணவுக்கு அப்புறம் லேசான சூடு தணிய ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை டீஸ்பூன் திரிபலா சூரணம் போட்டு கண்டிப்பாக குடிச்சிட்டு வர வேண்டும். தினமும் சாப்பிட்டு வரும்போது குடல் சுத்தமாகி உடலில் இருக்கக்கூடிய குடல் உறிஞ்சிகள் நாம் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய அத்தனை சத்துக்களை உறிஞ்சி ரத்தத்துக்கு அனுப்பும். குடல் உறிஞ்சிகள் மூலமாக நாம் சாப்பிட்ட உணவில் இருந்து அத்தனை சத்துக்களும் நம் உடம்பில் வந்து முழுமையாகச் சென்றடையும். இந்த உணவுகளை எல்லாத்தையும் அந்த நீங்க கண்டிப்பா ட்ரை பண்ணிட்டு வரலாம் அதிலிருந்து ரத்தச்சோகை அப்படிங்கிற பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் ஒரு சின்ன சாட் போட்டுக்கோங்க காலை 6 மணிக்கு கருப்பு திராட்சை ஜூஸ் வந்து குடிச்சிட்டு வரவும். அதே மாதிரி 11 மணிக்கு மாதுளை ஜூஸ் நாட்டு மாதுளை ஜூஸ் வந்து குடித்திட்டு வரவும். அதே மாதிரி மதிய உணவு மற்றும் இரவு திரிபலாசூரணம் வந்து கண்டிப்பாக எடுத்துட்டு வரவும். இதை  ஒரு பத்து நாள் வந்து ட்ரை பண்ணினால் நல்ல முடிவு  கிடைக்கும் கண்டிப்பாக  ட்ரை பண்ணி பாருங்கள். 

Comments